Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எமது கோள்மண்டலம்

எமது கோள்மண்டலம்

கோள்மண்டலம் என்றால் என்ன?

கோள்மண்டலம் என்பது அடிப்படை வானியல் ஆராய்ச்சி, விண்வெளி ஆய்வு மற்றும் இரவு நேர வானம் பற்றிய கல்வி மற்றும் பொழுதுபோக்குக் காட்சிகளைக் காட்டுவதற்கு அல்லது விண்வெளி ஆய்வுகள் பற்றிய பயிற்சிகள் என்பவற்றிற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கமாகும்.

அது எப்போது நிர்மாணிக்கப்பட்டது?

அரச எந்திரவியல் கூட்டுத்தாபனத்தினால் 1965 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு, இலங்கை தொழில்நுட்பவியல் கண்காட்சிக்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், விசேடமாக இரவு வானம் உருவாகும் அமைப்பினை காட்சிப்படுத்தவும் 1965 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி உத்தயோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

கட்டடக் கலைஞர் யார்?

பேராசிரியர் எ.என்.எஸ். குலசிங்ஹ

இலங்கைக் கோள்மண்டலத்தில் எத்தனை பேருக்கான ஆசன வசதிகள் உள்ளன?

570 பேருக்கான ஆசன வசதிகள் உண்டு.

கோள்மண்டலத்தின் அரைக்கோலப் பகுதியில் இரவு வான் எவ்வாறு அமைக்கப்படுகின்றது?

பூகோள ஒளிக்கிரணங்களை குவிந்து வீசச் செய்யும் கருவி மூலம் இரவு வானம் அமைக்கப்படும்.

எவ்வகையான ஒளிக்கிரண வீச்சுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன?

நட்சத்திர ஒளிக்கிரணத்திற்கான கார்ல் சியெஸ் (Carl Zeiss)பூகோள ஒளிக்கிரண வீச்சு
ஞாயிற்றுத் தொகுதி ஒளிக்கிரகணம், எரிநட்சத்திர மழை, வால் வெள்ளி, போன்றவற்றிற்கான மேலதிக ஒளிக்கிரண வீச்சுக் கருவிகள்
கண்ணாடிமயப்படுத்தப்பட்ட காட்சிகளின் GOTO XY படவில்லை ஒளிக்கிரணக் கருவி
Last Updated on Friday, 22 December 2017 08:10  

முகப்புஎமது கோள்மண்டலம்தரவிறக்கங்கள்இணையதள பொது மண்றம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு