Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு வானியல் IT ஆய்வுகூடம்

வானியல் IT ஆய்வுகூடம்

வானியல் IT ஆய்வுகூடம் என்பது என்ன?

வானியல் IT ஆய்வுகூடம் என்பது, இலங்கை கோள்மண்டல வளாகத்தில் அமைந்துள்ள கற்றல் வசதியாகக் காணப்படுவதுடன், இங்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வானியல் மற்றும் விண்வெளி ஆய்வுகள் என்பன காட்சிகளாக்கி காட்டப்படுகின்றன.

இந்த வசதியை ஒருவர் எவ்வாறு பெற்றுக்கொள்வது?

இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் வானியல் IT ஆய்வுகூடத்தில் (Astro IT Lab) ஒரு அங்கத்தவராக இருத்தல் வேண்டும்.

வானியல் IT ஆய்வுகூடத்தில் அங்கத்தவராவதற்கான தேவைகள் எவை?

இரண்டு விடயங்கள் இருத்தல் வேண்டும்.

  1. வானியல் ஆய்வைக் கற்பதற்கு உங்களுக்கு மிகுந்த ஆர்வம் காணப்படல் வேண்டும்.
  2. நீங்கள் 7ஆந் தரத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்.

இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள அங்கத்தவராவது எவ்வாறு?

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம், உறுப்பினராவதற்கான விண்ணப்பப் படிவம் வெளியிடப்படுவதுடன், புதிய உறுப்பினர்கள், ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பப் படிவத்தை இந்த இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்வதற்கு அல்லது அவை வெளியிடப்படும் காலத்தில் கோள்மண்டல அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். முதலில் வருகை தருபவர்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவுசெய்யும் நடைமுறை இடம்பெறும்.

எவ்வளவு காலத்திற்கு அங்கத்துவம் செல்லுபடியாகும்?

அங்கத்துவம் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாவதுடன், உங்களது அங்கத்துவத்தை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

அடுத்த உள்வாங்கல் எப்போது நிகழ்கிறது?

2015 அக்டோபர்

இந்த சவால் மூலம் எவ்வாறான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்?

அனைத்து அங்கத்தவர்களுக்கும் அடிப்படைக் கணனி மற்றும் வானியல் அறிவு பெற்றுக்கொடுக்கப்படும். அதன் பின்னர் அவர்களை கீழ்காட்டப்படும் பல்வேறு வானியல் ஆராய்ச்சி செயற்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவர்.

  • இரவு கால வான் கண்கானிப்பு
  • வானியல் செய்தி மடல் தயாரிப்பு (குழுச் செயற்பாடு)
  • வானியல் ஆய்வு கருத்தரங்குகளில் கலந்துகொள்ளல்
  • வானியல் ஆய்வு மாதிரியை நிர்மாணித்தல்
  • வானியல் ஆய்வு கருத்தரங்குகளை நடாத்துதல்
  • இரவு முகாம்களை நடாத்துதல் என்பன.

இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கத்துவர் ஆவதன் மூலம் மாணவர் ஒருவருக்குக் கிடைக்கும் நன்மைகள் எவை?

இலங்கையில் வானிலை ஆராய்ச்சி பற்றிய அதிக ஈடுபாடு கொண்ட மாணவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர். எனினும் அவர்கள் சரியான வழிகாட்டல் மற்றும் தேவையான கற்றல் உபகரணங்களின் குறைபாடு காரணமாக அறிவை விருத்தி செய்துகொள்ள முடியாது உள்ளனர். வானியல் IT ஆய்வுகூடத்தில் அங்கத்துவம் பெறுவதன் மூலம் மாணவர் ஒருவருக்கு இந்த இரண்டு தேவைகளையும் நிறைவு செய்துகொள்ள முடியும்.

மாணவர் ஒருவருக்கு அவரிடம் வானியல் ஆய்வு தொடர்பாகக் காணப்படும் தாகத்தை தணித்துக்கொள்ள முடிவதுடன், இலங்கையிலுள்ள ஏனைய பாடசாலை மாணவர்களின் வானிலை ஆராய்ச்சி அறிவை விருத்தி செய்துகொள்ளப் பங்களிப்புச் செய்தல் மற்றும் அதன் மூலம் நாட்டின் கல்வித் துறைக்கு பங்களிப்புச் செய்தல் போன்ற வாய்ப்புகள் கிட்டுகிறன.

Last Updated on Friday, 21 August 2015 06:57  

முகப்புஎமது கோள்மண்டலம்தரவிறக்கங்கள்இணையதள பொது மண்றம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு