Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு நடமாடும் கோள்மண்டலம்

நடமாடும் கோள்மண்டலம்

நடமாடும் கோள்மண்டலம் மூலம் எவ்வாறான சேவைகள் வழங்கப்படுகின்றன?

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நடமாடும் கோள்மண்டலம் மூலம் கோள்மண்டலக் காட்சியொன்றைப் பார்வையிட முடியும்.

நடமாடும் கோள்மண்டலம் மூலம் வழங்கப்படும் ஏனைய சேவைகள் எவை?

இரவு வானை காட்சிப்படுத்தல்

வானியல் அராய்ச்சித் திரைப்படம்

வானியல் ஆராய்ச்சி விரிவுரை

இந்த சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

தொலைபேசி மூலமோ அல்லது எமது இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலமோ விண்ணப்பித்தல் வேண்டும்.

எங்கள் வேண்டுகோள் உறுதிப்படுத்துவதை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?

கோள்மண்டலத்திலிருந்து உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படும்.

நீங்கள் வழங்க வேண்டிய வசதிகள் எவை?

பின்வருவனவற்றை வழங்குவதற்குத் தயாராக இருத்தல் வேண்டும்.

  1. 201'x201'x13' அளவான பாதுகாப்பான வகுப்பறையொன்று அல்லது மண்டபம் ஒன்று.
  2. விரிவுபடுத்திய கொண்ட ஒலி பெருக்கி உபகரணங்கள்.
  3. பிரதான மின் இணைப்பிலிருந்து மினசாரம் வழங்கப்படல்.
  4. வானியல் ஆராய்ச்சித் திரைப்படம் மற்றும் விரிவுரைகள் என்பவற்றிற்கென தனியான மண்டபமொன்று.

எங்கள் பணியாட்தொகுதியினரின் ஐந்து பேரிற்கு அவசியமான அனைத்த வசதிகளையும் செய்துகொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மேலும் நாங்கள் கொண்டுவரும் உபகரணங்களிற்கு பூரண பாதுகாப்பும் வழங்கப்படல் வேண்டும்.

நடமாடும் கோள்மண்டலத்தை திறந்த வெளியில் நடாத்த முடியமா?

நிச்சயமாக முடியாது.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

ஒரு தடவையில் காட்சியொன்றிற்காக எத்தனை மாணவர்களுக்கு இடவசதியை வழங்க முடியும்?

உச்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகும். ஆனாலும் நாளொன்றிற்கு பல காட்சிகளை நடாத்த முடியும்.

ஒரு காட்சிக்கான காலம் எவ்வளவு?

30 நிமிடங்கள்

காட்சியில் அடங்குபவை எவை?

குறித்த நாளின் இரவு வானம்.

Last Updated on Monday, 20 June 2011 05:05  

முகப்புஎமது கோள்மண்டலம்தரவிறக்கங்கள்இணையதள பொது மண்றம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு