Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு இரவு வான் கண்காணிப்பு

இரவு வான் கண்காணிப்பு

இரவு வானதத்தை அவதானிக்கும் முகாமானது, ஒளி ஒலி மாசடைவற்ற அமைதியான சூழலில் நிகழ்த்தப்படும்.

இந்த சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

தொலைபேசி மூலமோ அல்லது எமது இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலமோ எம்மிடம் விண்ணப்பித்தல் வேண்டும்.

எங்கள் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?

கோள்மண்டலத்தில் இருந்து உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படும்.

நீங்கள் வழங்க வேண்டிய வசதிகள் எவை?

பின்வருவனவற்றை வழங்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

  1. அதிக இடையூறினைக் கொண்டிராத, இரவு வானை அவதானிக்கக் கூடிய பொருத்தமான இடம் (மரம், கட்டிடம் மற்றும் தேவையற்ற ஒளி மற்றும் ஒலி மாசடைதல் என்பன அற்ற).
  2. விஸ்தரித்துக் கொண்ட ஒலி பெருக்கி உபகரணங்கள்.
  3. சில கதிரைகளுடன் கூடிய ஆசிரியர் மேசைகள் 03.
  4. மின் சூழ்கள் - 02.
  5. பிரதான மின்வழங்கல் ஊடாக மின்சாரம் வழங்கப்படல்.

எங்கள் பணியாட்தொகுதியினரின் 5 பேரிற்கு அவசியமான அனைத்த வசதிகளையும் செய்து கொடுக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். மேலும் நாங்கள் கொண்டுவரும் உபகரணங்களிற்கு பூரண பாதுகாப்பும் வழங்கப்படல் வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

கலந்துகொள்ளக் கூடிய உச்ச மாணவர்களின் தொகை யாது?

250 மாணவர்கள்.

கால எல்லை யாது?

மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை வரை.

பங்குபற்றும் ஒருவரிடம் காணப்பட வேண்டிய பொருட்கள் யாவை?

  1. எங்களால் அனுப்பப்படும் துண்டுப் பிரசுரம்.
  2. சிவப்பு செலோபன் தாளினால் மூடப்பட்ட புதிய மின்கலங்கள் இடப்பட்ட மின்சூள் ஒன்று.
  3. பென்சில் ஒன்றும் அழிறப்பர் ஒன்றும்.
  4. கத்தரிக்கோல் ஒன்று.
  5. ஒட்டுப்பசை குப்பி ஒன்று.
  6. A4 அளவிலான காட்போட் 4 துண்டுகள்.
  7. நூல் துண்டு ஒன்று.
  8. பருகு குழாய்.
  9. வரைதல் ஊசிகள் சில (Drawing pins)

எங்கள் கால ஒதுக்கீட்டினை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்?

தேவையான அனைத்து ஆவணங்களுடன் (துண்டுப் பிரசுரம்) உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றினை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.

இரவில் எவ்வாறான நிகழ்ச்சிகள் நடாத்தப்படும்?

  1. தொலைகாட்டி மூலம் இரவு வானை அவதானித்தல்.
  2. உடுத்தொகுதியை இணங்கானல்.
  3. நட்சத்திர வரைபடத்தை வாசித்தல்.
  4. நட்சத்திரத்தை வரைபடமாக்கல்.
  5. பிறப்பு நேரப்படி பிறப்பு பத்திர இராசியைக் கண்டுபிடித்தல்.
  6. விண்வெளி ஆராய்ச்சி விரிவுரை.
  7. விண்வெளித் திரைப்படம்.
  8. பொழுதுபொக்கு நிகழ்ச்சிகள்.

இரவு முகாமில் யார் யாருக்குக் கலந்துகொள்ள முடியும்?

  • மாணவர்கள்.
  • பாடசாலை ஆசிரியர்கள்.
  • விண்வெளி ஆய்வு அதிகாரிகள்.

இரவு நேர முகாம்களில் பயன்படுத்தப்படும் தொலைகாட்டி வகைகள் எவை?

நிவ்டோனியன் தொலைகாட்டி

தெறிப்புத் தொலைகாட்டி

ஜீ பீ எஸ் (GPS) கொண்ட சீமிட் - கஸ்கிரேன் தொலைகாட்டி

துவாரம்: 6"
உடுப்பெருக்கம்: 25mm (50x)

துவாரம்: 4"
உடுப்பெருக்கம்: 25mm (30x)

துவாரம்: 280mm (11")
குவியத் துவாரம்: 2800 mm ƒ/10
உடுப்பெருக்கம்: 40mm (70x)
பைன்டஸ்கோப்: 8x50
பூச்சு : நட்சத்திர பிரகாச நிறம்
GPS: உள்ளக
புள்ளி விபரக் களஞ்சியம் : 40,000+
குவியல்: 84 lbs
Last Updated on Monday, 20 June 2011 05:20  

முகப்புஎமது கோள்மண்டலம்தரவிறக்கங்கள்இணையதள பொது மண்றம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு