
ශ්රී ලංකා ග්රහලෝකාගාරය
இலங்கை கோள்மண்டலம்.
Sri Lanka Planetarium.
June 27, 2022
கோவிட்-19 தொற்றின் காரணமாக, கோள் மண்டல காட்சிகளாவன சனிக்கிழமைகளில் காலை 10.00 மற்றும் மதியம் 02.00 மணிக்கு மட்டுமே காட்டப்படுகின்றன.
செவ்வாய் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் பாடசாலைகளுக்கான நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்பதிவு செய்யலாம்.
காட்சிக்குரிய நேரத்திற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்பாக கோள் மண்டலத்திற்கு வருகை தரவும்.
கோள்மண்டலமானது , திங்கட்கிழமை மற்றும் அரச விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு எம்முடன் தொடர்பு கொள்க:
(+94) 11 2586 499
கோவிட்-19 தொற்றின் காரணமாக, கோள் மண்டல காட்சிகளாவன சனிக்கிழமைகளில் காலை 10.00 மற்றும் மதியம் 02.00 மணிக்கு மட்டுமே காட்டப்படுகின்றன.
செவ்வாய் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் பாடசாலைகளுக்கான நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்பதிவு செய்யலாம்.
காட்சிக்குரிய நேரத்திற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்பாக கோள் மண்டலத்திற்கு வருகை தரவும்.
கோள்மண்டலமானது , திங்கட்கிழமை மற்றும் அரச விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு எம்முடன் தொடர்பு கொள்க:
(+94) 11 2586 499
பாடசாலை மாணவர்களுக்காக | வயது வந்தவர்களுக்காக | |
கிழமை தினங்களில் | Rs : 30.00 * | Rs : 100.00 |
வார இறுதி நாட்களில் | Rs : 50.00 ** | Rs : 100.00 |
* பாடசாலை சீருடையில் வருகை தரும் மாணவர்களுக்கு மட்டும்
** 12 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு மாத்திரம்
நமது சூரிய குடும்பம் எப்படி உருவானது? இந்த கோள் மண்டல நிகழ்ச்சித் திட்டமானது , ஆரம்பகாலத்தில் வாயு மற்றும் தூசிகளால் ஆன மேகங்கள் என்ற நிலையிலிருந்து, பார்வையாளர்களை, இன்று நாம் அறிந்த அதன் இறுதி உருவாக்கம் வரையில் எடுத்துச் செல்கிறது ஆனால், எஞ்சியிருக்கும் கேள்வி யாதெனில், வேறு எந்த பொறிமுறையின் மூலமாகவும் அல்லாது இது இவ்வாறு தான் நடந்தது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?.
1990 ஆம் ஆண்டில் ஏவப்பட்டதிலிருந்து, ஹபிள் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படாத அளவிற்கு விவரங்களும் நம்பமுடியாத அளவிற்கு படங்களும் பெறப்பட்டுள்ளன. மேலும் இது பிரபஞ்சத்தின் மிக அருகில் உள்ள பொருளிலிருந்து வெகு தொலைவில் உள்ள தரவுகளையும் வழங்குகிறது.
முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டது முதல் நிலவில் தரை இறங்கியது வரை, அதுபோன்று ,சர்வதேச விண்வெளி நிலையத்தின் நிர்மாணத்தில் இருந்து , தனியார் விண்வெளிப் பயணம் வரையில் இடம்பெற்ற நிகழ்வுகளினை வரிசையாக நினைவில் கொண்டு , விண்வெளிப் பயணத்தின் அற்புதமான தொடக்கங்களை அனுபவியுங்கள். விண்வெளியுடன் தொடர்பான விடயங்களில் முதன்மை இடத்தினை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் அமைப்புகளில் ஆரம்ப காலங்களில் நிலவிய போட்டி நிலை மற்றும் இன்று நாடுகளுக்கு இடையில் நிலவும் அமைதியான கூட்டிணைவு என்பனவற்றினை அவதானிக்க.
HMS பீகிள் கப்பலில் உலகைச் சுற்றிவரும் சாகசப் பயணத்தில் இளம் சார்லஸ் டார்வினுடன் சேரவும். விக்டோரியன் காலங்களில், பல இயற்பியல் நிகழ்வுகள் ஏற்கனவே இயற்கை விதிகளால் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன, ஆனால் வாழ்வு எனும் கதையின் மிக முக்கியமான வழிமுறையானது இன்னும் அறியப்படவில்லை.
சில நட்சத்திரங்கள், காலத்தோடு பழமை நிலைக்கு செல்வதால் அவை பெரும்பாலும் மறந்து விடப்பட்டவைகளாக உள்ளன. மீதமுள்ளவை பிரகாசமாக நினைவில் நிற்பவை . அவை . சக்தி மிகு வெடிப்புக்களுடன் முடிவுக்கு வருபவை .ஆனால் அந்த நட்சத்திரங்கள் தமது ஒவ்வொரு கட்டத்திலும், பிரபஞ்சத்திற்கு சக்தியினை வெளியிடுகின்றன. விண்மீன் மண்டலத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரத்திரங்களினை நோக்குவதற்கு மிக அழகான மற்றும் ஆபத்தான பயணத்தை நாங்கள் மேற்கொள்வோம்.
நட்சத்திரங்களிலிருந்து கிரகங்கள் எந்த வகையில் வேறுபடுகின்றன? பரிச்சியமான விண்மீன்களை எங்கே காணலாம்? கலிலியோவின் விளக்கங்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலைத் தரும் . பிரபஞ்சத்தின் மையமாக மாறும் வாய்ப்பை பூமி எவ்வாறு இழந்தது என்பதை அவரது தனிப்பட்ட வாழ்க்கைக் கதையிலிருந்து நாம் அறிந்துக்கொள்வோம்.
இலங்கை கோள்மண்டலம்,
பேராசிரியர். ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.
பதிப்புரிமை © 2022 இலங்கை கோள்மண்டலம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வடிவமைப்பு மற்றும் விருத்தி - வை .சி . ஜயலத்.